கதையின் கதை
கதை எழுதுவதின் பின்னே ஒரு கதை இருந்தது. இணையத்தில் தெரிந்தவர் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். எழுதினேன். அனுப்பினேன். சற்றுக் காலத்தின் பின்னர் எழுதியதில் தாடச்சுப் பிழைகள் இருந்தன. என் கதை வெளிவரவில்லை. அதே நபர் எழுதிய கதையில் பல ஒற்றுமைகள் இருந்தன. எனக்கு குழப்பமாக இருந்தது. என் கதையில் சில மாற்றங்கள் செய்து திண்ணைக்கு அனுப்பினேன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10708027&format=html
நடந்ததிற்கு சாட்சி இல்லை. ஒரு கதை வாசித்ததின் விளைவாக புதுக்கதை எழுதும் போது சில நேரங்களில் வாசித்த கதையின் சாயல் வரலாம். எதுவாயினும் என்கதை பிந்தி வந்ததின் காரணமாக அவ்விளைவுகள் என்கதையில் இருப்பதாகவே யாவரும் என்னக் கூடும்.
அதிர்வாகத் தொடங்கி ஆழ்ந்த கற்பனையில் வளர்ந்து பின் சற்று செப்பனிடப்பட்டது என் கதை. ஒரு கதை அல்லது கவிதை எழுதுவதில் சாராம்சத்திற்கு பின் வருவன காரணமாக இருக்கலாம்.
1. சொந்த அனுபவம்
2. கனவு
3. பார்த்த படம்
4. வாசித்த கதை அல்லது கவிதை
5. அலங்கரிக்கப்பட்ட கற்பனை
என்கதைக்கு அன்னியன் படமும் ஐந்தாவது காரணமும் தான்
Monday, November 23, 2009
Monday, October 25, 2004
நல்லூர் கந்தன்
Nallur Kumaranhttp://www.nalluran.com/
நல்லூர் கந்தன்
ஆவணி மாதம் பிறந்ததினம் - மனம் . .
ஆடிக் களிக்கச் சிறந்ததினம்
சேவற் கொடியும் பறக்கும்தினம் - நல்லூர் . .
சீரால் கவலை மறந்ததினம்
சூழலில் சுத்தமும் கூடுமிடம் - நல்லூர் . .
சுற்றமும் கொண்டாட்டம் தேடுமிடம்
தோழமை எங்குமே தோன்றுமிடம் - தெய்வ . .
சொர்க்கமும் காணவே நாடுமிடம்
கோல எழிலில் தலமாங்கே - மக்கள் . .
கோடித் தொகையாய் குலமாங்கே
வேலன் விழாவில் அருளதனால் - வினை . .
வெற்றி கிடைக்கும் பலமாங்கே
நூற டியகல வீதியங்கு - தினம் . .
நொந்த தரமெனின் நாதியங்கு
ஆறைந்து நாட்கள் முருகவிழா - அளவில் . .
அன்புடன் மக்கள் பாதியங்கு
பத்தாம் தினமாம் பவனியிலே - மஞ்சம் . .
பார்க்க முடியும் புவனியிலே
முத்துக் குமரன் வருகையிலே - மக்கள் . .
முத்தி பெறுவார் அவனியிலே
நூறடிச் சப்பறம் கட்டிடுவார் - பின் . .
நுனியும் எழில்தர ஒட்டிடுவார்
பேறெனப் பார்க்கத் துடிக்கும் சனம் - அட . .
பின்னேரம் ஆயினும் எட்டிடுவார்
தேரில் அழகிய ஆறுமுகம்- வீதி . .
சேர்ந்துநல் ஆசிகள் கூறு முகம்
ஊரிலே யாவரும் கூடி வணங்கிட . .
ஒப்பனைப் பச்சையில் ஏறுமுகம்.
அண்ணனும் ஈற்றிலே வந்திடுவான் - ஐவராய் . .
ஆவணித் தீர்த்தமும் தந்திடுவான்
பெண்கள் இருவரின் கைப்பிடியில் -அந்தப் . .
பிள்ளை அருள்தர முந்திடுவான்.
Nallur Kumaranhttp://www.nalluran.com/
நல்லூர் கந்தன்
ஆவணி மாதம் பிறந்ததினம் - மனம் . .
ஆடிக் களிக்கச் சிறந்ததினம்
சேவற் கொடியும் பறக்கும்தினம் - நல்லூர் . .
சீரால் கவலை மறந்ததினம்
சூழலில் சுத்தமும் கூடுமிடம் - நல்லூர் . .
சுற்றமும் கொண்டாட்டம் தேடுமிடம்
தோழமை எங்குமே தோன்றுமிடம் - தெய்வ . .
சொர்க்கமும் காணவே நாடுமிடம்
கோல எழிலில் தலமாங்கே - மக்கள் . .
கோடித் தொகையாய் குலமாங்கே
வேலன் விழாவில் அருளதனால் - வினை . .
வெற்றி கிடைக்கும் பலமாங்கே
நூற டியகல வீதியங்கு - தினம் . .
நொந்த தரமெனின் நாதியங்கு
ஆறைந்து நாட்கள் முருகவிழா - அளவில் . .
அன்புடன் மக்கள் பாதியங்கு
பத்தாம் தினமாம் பவனியிலே - மஞ்சம் . .
பார்க்க முடியும் புவனியிலே
முத்துக் குமரன் வருகையிலே - மக்கள் . .
முத்தி பெறுவார் அவனியிலே
நூறடிச் சப்பறம் கட்டிடுவார் - பின் . .
நுனியும் எழில்தர ஒட்டிடுவார்
பேறெனப் பார்க்கத் துடிக்கும் சனம் - அட . .
பின்னேரம் ஆயினும் எட்டிடுவார்
தேரில் அழகிய ஆறுமுகம்- வீதி . .
சேர்ந்துநல் ஆசிகள் கூறு முகம்
ஊரிலே யாவரும் கூடி வணங்கிட . .
ஒப்பனைப் பச்சையில் ஏறுமுகம்.
அண்ணனும் ஈற்றிலே வந்திடுவான் - ஐவராய் . .
ஆவணித் தீர்த்தமும் தந்திடுவான்
பெண்கள் இருவரின் கைப்பிடியில் -அந்தப் . .
பிள்ளை அருள்தர முந்திடுவான்.
Thursday, October 14, 2004
நிலவாக நானிருந்தால்
சந்த வசந்தத்தில் வடித்த கவிதை ; பிழைகளைச் சுட்டிக் காட்டிய கவிஞர்களுக்கு நன்றி
நிலவாக நானிருந்தால் ==============
சந்த வசந்தத்தில் வடித்த கவிதை ; பிழைகளைச் சுட்டிக் காட்டிய கவிஞர்களுக்கு நன்றி
நிலவாக நானிருந்தால் ==============
கிட்ட முடியாமல் கெஞ்சும் குழந்தைக்கும்
நட்ட நடுஇரவில் நாயாய் அலைவோர்க்கும்
குட்டிக் கதையில் குழாவும் வயதினர்க்கும்
கட்டிட மில் லாது கருகும் இரவலர்க்கும்
எட்டாத தூரத்தில் ஏகாந்தம் செய்வோர்க்கும்
பட்ட நாட்டிலும் பௌர்ணமி பார்ப்போர்க்கும்
வட்டிக்கு வாங்கியதால் வாழ்வு இழந்தோர்க்கும்
முட்டாள் பணியால் முதுகுவலி பெற்றோர்க்கும்
வட்ட வடிவத்தில் வானத்தில் வந்துதிக்கும்
மட்டற்ற சக்தி மதியாய் இருந்தால்
முழுநிலவு தொட்டு முகம்மலரும் பிஞ்சு
அழுகின்ற வேளை அருகில் இருந்து
வழுதில்லா உள்ளம் வருந்தாமல் செய்வேன்
வழுக்கி விழுந்து வருத்தம் பெறமுன்
குழந்தையை அள்ளிக் குதூகலம் ஊட்டி
எழுகின்ற போதும் இனிதாய் அணைத்துக்
குழவிகள் யாவரையும் கொண்டனைத்துப் பாரில்
எழிலும் திகழ இனிமை தருவேன்
களைக்க உழைத்துக் கடினதாய் வாழ்வு
திளைத்துப்பின் தேனாகத் தித்திக்க என்றும்
கிளைகள் பலதாய் கிளிச்சோலை செய்து
களங்கள் நிறையக் களிக்கத் தருவேன்
இளைத்த இரவலர்க்(கு) இல்லாமை என்ற
வளமற்ற போக்கையும் வையகத்தில் நீக்கிடுவேன்
சிக்கிடச் செய்திடும் சீரற்ற வேலையில்
முக்கிப் பணியிலே முட்டாளாய் உள்ளோர்க்கு
தக்க சமயத்தில் நல்ல தரணியாய்
நிக்க வருவேன் நிலவாக நானிருந்தால்
திங்களொன்றில் சீராகத் தேய்ந்தாலும் அங்கங்கே
சங்கடம் என்றால் சடுதியாய் வந்துநின்று
o ( அமாவாசை அகன்று வளர்கை காட்டல் )
கங்குல் பொழுதில் கழியும் தினமென
அங்கே அமாவாசை அற்று வளர்ந்திடுவேன்
**அந்திகணச் சிந்தனையால் அந்தணர் மந்திரத்தில்
சொந்தங்கள் வந்திருக்கத் **தொந்தரவுக் குந்தலிலே
வெந்தஎன்னை முந்தியவள் விந்தைமிகு
சுந்தரியை சந்திக்கத் தந்துவிட்ட சந்திரனாய் வந்தால்
( என்ன செய்வேன் என்று அடுத்த கண்ணி வாசிக்க )
( என்ன செய்வேன் என்று அடுத்த கண்ணி வாசிக்க )
கடல்தாண்டி வேலை கனடா என் றாக
நெடுநேரப் பேச்சிலே நித்தம் கதைத்து
மடலில் முகம்காட்டி வந்தன்பு செய்து
இடைஞ்சல் புரிந்திடும் என்றன் மனையாள்
வடிவமும் கண்டிட வானத்தில் ஏறி
திடமாய் உறைந்திடும் செய்தியும் சொல்வேன்
வளர்பிறை பின்னரோ வாடும் பிறையும்
வளர்கையில் போலியாய் வாழும் வடிவம்
தளர்ந்த தமிழர் சமூகம் கிழக்கில் ;
அளவற்ற முன்னேற்றம் ஆங்கே விடையாய்
வெளிவானில் விண்நோக்கி வெற்றிநடை மேற்கில் ;
வெளிநாடு போலத்தான் விஞ்ஞானம் செய்து
களிப்பில் தமிழால் கனிந்திருக்கும் சூழல்
வளம்பெறச் செய்வேன் மதியாய் இருந்தால்
தமிழைச் சுவைக்கத் தரணியில் எங்கும்
அழகு நிகழ்வுகள் ஆண்டில் பலதாய்
கழகம் நடத்திக் களித்து மகிழ்ந்து
பழுத்த கலைகள் பரப்பும் நிலைகள்
வழுவில்லாச் சுற்றம் மலர்ந்து சிறந்து
மொழியிலே நாமே முதலிடம் என்று
விழிகள் வியப்பில் விளங்கத் திகழ
புழுவுடன் பூக்களும் போற்றி இருக்க
வழியும் செய்து வதனத்தில் வாழ்த்திப்
பொழிவேன் மலர்கள் புகழ்நிலை கிட்டிட
முற்றும் கவிவடிவம் பற்றி :
முற்றும் கவிவடிவம் பற்றி :
அமாவாசை, வளர்பிறை,பௌர்னமி,தேய்பிறை என்பதை விளக்க கண்ணி அடிகள் எனண்ணிக்கையில் 10, 8,6,4,2,0,2,4,6,8,10 என்றமைத்தேன் சுழற்சியைக் காட்டினேன் கிட்ட என்று தொடங்கி கிட்டிட என்று முடித்தேன்
சில விளக்கங்கள் : **அந்திகணச் சிந்தனையால் : அந்தியிலே செயவதென முடிவாக்கப்பட்ட என் திருமணம் என்பதால் **தொந்தரவுக் குந்தலிலே : மண்வறையில் தொடர்ந்து அமர்ந்திருந்த என் கடின அனுபவம் கருதி
Saturday, October 09, 2004
எழுத்துத் தோன்றியது எந்தக் காலம்? கவிதை தோன்றியது எந்தக் காலம்? இரண்டுமே ஒருநேரத்தில் உருவாகியிருக்குமா? இதன் வரலாறு தெரிந்திருக்கத் தேவையில்லை எனினும் தற்காலத்தில் கவிதை என்று எழுதப்படும் ஆக்கங்களில் கவித்துவம் இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறோம். மரபு, புதுக்கவிதை என்று இரண்டிலுமே இவ்வாறு கவித்துவம் இன்றி எழுதப்படுவதாய் நான் கருதுகிறேன்.
தற்போதெல்லாம் இணையத்தில் யாப்பிலக்கணம் கற்றுத்தர பலபெரிய கவிஞர்கள் உள்ளனர். கற்க முயற்சிக்கும் அனுபவத்தில் நான் எங்கோ வாசித்த குறிப்பின்படி, யாப்பிலக்கணம் கற்று வெண்பா,விருத்தம் எழுத முடியும். ஆனால் அவை கவிதைகளாய் அமைவது எழுதுபவரின் கவித்திறனைப் பொறுத்த்தது என்று சொல்லப்பட்டிருந்தது. எதுவாயினும் கற்க முனைதலும் கற்றவற்றை எழுதுவதுமாய் பலர் இணையத்தில் வலம்வரல் நல்லதொரு நிகழ்வு. இவ்வாறன பல புதியவர்களை மரத்தடியிலும் மரபுக்கவி கற்றலை மரபிலக்கியத்திலும் காணலாம்.
புதுக்கவிதை பற்றிப் பலருக்கு பலவிதமாய் கருத்துகள் இருக்கலாம். எனினும் எழுத முனையும் பலரில், சரியாக என்னவென்று வரையறுக்கத் தெரிந்தவர்கள் எத்தனைபேர் ? அமைப்புத் தெரியாமல் நல்ல கருத்துக்களைச் சொல்லும் கவிதைகள் பலவற்றை இன்று அதிகம் காணலாம். கருத்துச் சொல்வதை ஆழம் பொதியச் சொல்லாமல் வெறும் வசனமாகவோ சொற்கோவையாகவோ அமைய எழுதும் சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறு எழுதப்படும் முயற்சிகள் இணையக்குழுமங்களில் சமர்பிக்கப்படும் போது விமர்சங்களால் படைப்புத்தன்மை சிறக்கவழி உண்டு.
மனதில் கவிதைபற்றி பல கேள்விகள் உண்டு. அவற்றிக்கு விடைகள் தேடும் முன்னர் இலக்கணம் முற்றுமுழுதாய்த் தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது. நான் எழுத முனையும்/முனைந்த எல்லா ஆக்கங்களிலும் பல ஒற்றுப் பிழைகள். எனது முதல் இடுகையில் உள்ள அலை தாண்டி அம்மனில் கூட பல பிழைகளை பேராசியர் அனந்த் அவர்கள் திருத்தித் தந்திருந்தார். நன்றி கூறும் இந்நேரதில் கவித பற்றிய உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்.
கீழே தருவது Toronto கவியரங்கில் நான் படித்த கவிதை :
தலைவர் : கவிமாமணி இலந்தை ராமசாமி தலைப்பு : அவரவர் விருப்பம் போல்
அலை தாண்டி அம்மன் ======================
கடல்கடந்து வீற்றுள்ள நயினைத் தீவு
கருணைமிகு கடவுளையும் காண வேண்டின்
படகிடம் செல்லுகின்ற பயணம் உண்டு
பழைய வள்ளம் விசைப்படகாய் சுமந்து செல்லும்
கடல்நடுவே பயணிக்கும் இன்ப வேளை
காட்சிதரும் பல இடங்கள் அழகில் உச்சம்
வடதிசையில் பயணித்து முடிக்கும் நேரம்
வரவேற்கும் கோபுரமோ வதனக் காட்சி
பெயரினிலே நயினைபுற அம்மன் என்று
பெரிதாகப் புகழ்பெற்ற சிறப்புக் கோயில்
வியக்கவைக்கும் மிடுக்கான தீவு ஒன்றில்
விளங்குகின்ற வெளிப்புறத்தில் அகல வீதி
உயர்ந்தமர நிழல்கொண்ட பாதை ஆங்கே
ஒப்பற்ற அம்மன்தேர் ஊரார் சீரில்
அயர்ந்தவனும் எழுப்பவைக்கும் மணியின் ஓசை
ஆலயத்தால் அழைக்கப்படும் நல்ல நாதம்
முறைப்படியாய் கட்டியுள்ள பழைய கோயில்
மூலத்தில் உறைகின்றாள் தூய அம்மன்
மறைத்துநிற்காக் கொடிமரமும் நடுவே அங்கு
வதனத்தில் மிஞ்சிநிற்கும் உயரக் கூரை
நிறையெழிலில் உட்புறத்தே வீதி நான்கு
நெஞ்சத்தைக் கவர்ந்திருக்கும் தெய்வச் சிற்பம்
இறையருளைக் கூட்டிவிடும் எழிலாய்ப் பூசை
இதைப்புரியும் விதமுரைக்கச் சொற்கள் இல்லை
வரலாற்றில் வானுயர்ந்த புகழைப் பெற்று
வையகத்தில் அருள்தருவாள் நயினை அம்மன்
சிரம்தாழ்த்தி வணங்கவரும் பக்தர்க் கெல்லாம்
சிறப்பாக அன்னதானம் என்றும் உண்டு
அரிதாக ஆண்டவனை நெருங்குவோர்க்கும்
அருமைமிகு சூழலிலே மாற்றம் கிட்டும்
தரணியிலே தனித்துவமாய் நிற்கும் அம்மன்
தந்திடுவாள் சந்தோச வாழ்வு என்றும்
தலைவர் : கவிமாமணி இலந்தை ராமசாமி தலைப்பு : அவரவர் விருப்பம் போல்
அலை தாண்டி அம்மன் ======================
கடல்கடந்து வீற்றுள்ள நயினைத் தீவு
கருணைமிகு கடவுளையும் காண வேண்டின்
படகிடம் செல்லுகின்ற பயணம் உண்டு
பழைய வள்ளம் விசைப்படகாய் சுமந்து செல்லும்
கடல்நடுவே பயணிக்கும் இன்ப வேளை
காட்சிதரும் பல இடங்கள் அழகில் உச்சம்
வடதிசையில் பயணித்து முடிக்கும் நேரம்
வரவேற்கும் கோபுரமோ வதனக் காட்சி
பெயரினிலே நயினைபுற அம்மன் என்று
பெரிதாகப் புகழ்பெற்ற சிறப்புக் கோயில்
வியக்கவைக்கும் மிடுக்கான தீவு ஒன்றில்
விளங்குகின்ற வெளிப்புறத்தில் அகல வீதி
உயர்ந்தமர நிழல்கொண்ட பாதை ஆங்கே
ஒப்பற்ற அம்மன்தேர் ஊரார் சீரில்
அயர்ந்தவனும் எழுப்பவைக்கும் மணியின் ஓசை
ஆலயத்தால் அழைக்கப்படும் நல்ல நாதம்
முறைப்படியாய் கட்டியுள்ள பழைய கோயில்
மூலத்தில் உறைகின்றாள் தூய அம்மன்
மறைத்துநிற்காக் கொடிமரமும் நடுவே அங்கு
வதனத்தில் மிஞ்சிநிற்கும் உயரக் கூரை
நிறையெழிலில் உட்புறத்தே வீதி நான்கு
நெஞ்சத்தைக் கவர்ந்திருக்கும் தெய்வச் சிற்பம்
இறையருளைக் கூட்டிவிடும் எழிலாய்ப் பூசை
இதைப்புரியும் விதமுரைக்கச் சொற்கள் இல்லை
வரலாற்றில் வானுயர்ந்த புகழைப் பெற்று
வையகத்தில் அருள்தருவாள் நயினை அம்மன்
சிரம்தாழ்த்தி வணங்கவரும் பக்தர்க் கெல்லாம்
சிறப்பாக அன்னதானம் என்றும் உண்டு
அரிதாக ஆண்டவனை நெருங்குவோர்க்கும்
அருமைமிகு சூழலிலே மாற்றம் கிட்டும்
தரணியிலே தனித்துவமாய் நிற்கும் அம்மன்
தந்திடுவாள் சந்தோச வாழ்வு என்றும்
Subscribe to:
Comments (Atom)
